நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டன. பூஜை முடிந்து கடந்த 2ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து பவனியாக நேற்று காலை குழித்துறை மகாதேவர் கோயிலில் இருந்து புறப்பட்டு மாலையில் பத்மனாபபுரம் வந்தடைந்தது. தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி சிலை வைக்கப்ட்ட பின், வேளிமலை குமாரகோயிலுக்கு முருகன் சிலை கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை சிலை இன்று சுசீந்திரம் வந்தடையும்.