பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
திண்டிவனம்: இரும்பை கோவிலில், திருப்பவித்ரோத்சவத்தை முன்னிட்டு, கலசாபிஷேகம் நடந்தது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் ஐந்தாம் ஆண்டு திருப்பவித்ரோத்சவம், கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜைகள், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் யாகபூஜை, மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நான்காம்கால யாக பூஜைகள், மகாபிஷேகம், விசேஷ யாகபூஜை, 9:00 மணிக்கு மகா காளேஸ்வரர் சுவாமிக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, மகாகாளேஸ்வரர் சுவாமிக்கு விசேஷ திருவாபரண அலங்காரமும், பஞ்ச முக அர்ச்சனை நடந்தது.