பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், புரட்டாசி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி நடந்தது. காலை, 10:00 மணிக்கு பாலாபி ?ஷகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாயி சத்தரிதம் பாராயணம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு சாயி நாம ஜெபம், மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க, பாபாவிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு, 7:15 மணிக்கு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.