நாகர்கோவில், பவுர்ணமி நாளில் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஸ்டாலின் மனைவி அர்ச்சனை நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பவுர்ணமி நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நாகர்கோவில் நாகராஜாகோயிலுக்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி உடன் சென்றனர். அங்கு கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தார். இவர்கள் சார்பாக சிறப்பு அபி ேஷகமும் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் மேல்சாந்தி பிரசாதம் வழங்கினார். 40 நிமிடங்கள் கோயிலில் இருந்த அவர் விடியும் முன்பே அங்கிருந்து சென்று விட்டார். துர்கா வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.