பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, வீரராகவபெருமாள் நேற்று புறப்பட்டு, திருவள்ளூர் சென்றடைந்தார். ஸ்ரீபெரும்புதுாரில், வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகரின் அவதார தினம். இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், வெள்ளிக்கிழமை இரவு, திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு மணவாள நகர், ஆயக்கொளத்துார் வழியாக, சனிக்கிழமை காலை, ஸ்ரீபெரும்புதுார் வந்தடைந்தார். ஸ்ரீபெரும்புதுார் எல்லையில், வீரராகவப் பெருமானை பூரண கும்ப மரியாதையுடன், வேதாந்த தேசிகர் எதிர் கொண்டு அழைத்தார். அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு நடந்ததும், வேதாந்ததேசிகர் கோவிலை, வீரராகவப் பெருமாள் சென்றடைந்தார். இதையடுத்து பெருமாளுக்கு, விசேஷ திருமஞ்ஜனம் மற்றும் திருப்பாவை சாற்றுமறை நடைபெற்றது. நேற்று அதிகாலை, 4;00 மணிக்கு, வீரராகவப் பெருமாள், வேதாந்த தேசிகர் புறப்பாடு நடந்தது. பின், ஸ்ரீபெரும்புதுார் ஊர் எல்லையில், வீரராகவப் பெருமாளுக்கு, பிரியாவிடை அளிக்கப்பட்டது. அதன் பின், வீரராகவப் பெருமாள், திருவள்ளூர் கோவிலை நேற்று சென்றடைந்தார்.