மயிலம்: கள்ளகெளத்துார் ஆஞ்சநேயர் சுவாமி கோவி லில் புரட்டாசி மூன்றாம் சனி வழிபாடு நடந்தது. கள்ளகெளத்துார் குளக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகோவில் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு நறுமணப் பெருட்களினால் அபிஷேகம், வழிபாடுக்கு பின்னர் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை வழிபாடு, பஜனைக் குழுவினர் பாடல்களை பாடினார்கள். இதேபோல், கூட்டேரிப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.