மனம் போன போக்கில் போகாமல், தீயசெயல்களில் இருந்து விலகி நல்லவற்றை மட்டும் சிந்திப்பவனே அறிவில் சிறந்தவன். அறிவே மனிதனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி. பகைவராலும் அறிவைக் கவர முடியாது. பாதுகாப்பு அரண் போல அறிவு மனிதனைப் பாதுகாக்கும். யார் எந்த விஷயத்தை சொன்னாலும், அதை அப்படியே ஏற்பது கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிபவனே அறிவுடையவன். அதனை அறிய இயலாதவனை அறிவிலி (முட்டாள்) என்றே சொல்ல வேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவனே அறிவில் சிறந்தவன். அதைப் பொருட்படுத்தாமல் எதிர்கொள்பவன் அறிவில்லாதவன். வருவதை அறிந்து, அதற்கேற்றபடி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையவர்களுக்கு அதிர்ச்சி தரும் துன்பம் வாழ்வில் உண்டாகாது. சமுதாயத்தில் சிறந்தவர்கள் பின்பற்றிய நல்வழியில் நடப்பவனே அறிவாளி. இத்தகையோர் எல்லோரிடமும் நட்பு பாராட்டி மகிழ்வர்.சொல்கிறார் திருவள்ளூவர்