பரமக்குடி: பரமக்குடி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி கோயிலில் 8 ம் ஆண்டு சத்ரு சம்ஹார ேஹாமம் நடந்தது. முன்னதாக அக். 9 ல் காலை7:00 மணி முதல் அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து ேஹாமங்கள், மகாபூர்ணாகுதிக்குப் பின்னர் காலை 10:30 மணிக்கு சுப்ரமண்ய சுவாமிக்கு திரவிய அபிேஷகம், கும்ப அபிேஷகம் நடந்தது. முருகனுக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவை ஆலய அர்ச்சகர்கள் அம்பி, சிவா பட்டர்கள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.