பதிவு செய்த நாள்
11
அக்
2017
01:10
பவானி: சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 16.86 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் திகழ்கிறது. கோவிலில், மொத்தமாக, 21 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், 16 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் ரொக்கம்; 38 கிராம் தங்கம்; 248 கிராம் வெள்ளி; மலேசியா நோட்டு இரண்டு, அமெரிக்கா டாலர் ஒன்று, காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அதேபோல் செல்லாத, 500 ரூபாய் நோட்டுகள் ஆறு, 1,000 ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்தது. சங்கமேஸ்வரர் கோவில் தக்கார் பழனிகுமார், உதவி ஆணையர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலையில், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோவில் பணியாளர்கள், பவானி அறிவு திருக்கோவில் பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.