ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.64.29 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2017 11:10
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூபாய் 64.29 லட்சம் வருவாய் கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 45 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம்் 64 லட்சத்து 29 ஆயிரத்து 432 ரூபாயும், தங்கம் 85 கிராம், வெள்ளி 6 கிலோ 440 கிராம் காணிக்கையாக கிடைத்தது.