Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளிக் குளியலில் சொல்ல வேண்டிய ... இரட்டை தீபாவளி: திருப்பூரில் கோலாகலம் இரட்டை தீபாவளி: திருப்பூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த லட்சுமிநாராயணன் கோவில் புதுப்பிக்க பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த லட்சுமிநாராயணன் கோவில் புதுப்பிக்க பக்தர்கள் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

17 அக்
2017
03:10

சங்ககிரி: பழமை வாய்ந்த, வைகுந்தம் லட்சுமிநாராயணன் கோவிலை புதுப்பிக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், வைகுந்தம் அக்ரஹாரத்தில், 500 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட பழமை வாய்ந்த லட்சுமி நாராணயன் கோவில் உள்ளது. கோவிலில், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கற்பகிரகம் ஆகியவை கற்துாண்களால் ஆனவை. கோபுரம் மற்றும் கோவிலை சுற்றிலும் சிறிய செங்கற்களால், சுண்ணாம்பு, மணல் கலவையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.   

கற்பகிரகத்தில், லட்சுமிநாராயணன், வெளிப்புறத்தில் மூன்று நாகர்சிலை, நம்மாழ்வார், ராமானுஜர் சிலைகள் உள்ளன. கோபுரம் சிதலிமடைந்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், மரம், செடி, கொடிகள் முளைத்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள், பயந்தபடியே சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கோவில் வளாகத்தையொட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால், அதன் அருகில் மாணவர்கள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

கோவில் பூசாரி, கிருஷ்ணன் ஐயர், 59, கூறியதாவது:  லட்சுமி நாராயணன் சுவாமி கோவில், கற்துாண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரம் சிதலமடைந்து வருவதால், அழியும் நிலை உள்ளது. இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து சீரமைத்தால், பழமையை கட்டிக்காக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது:  பழமை வாய்ந்த கோவில் என்பதால், தொல்லியல் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். துறையினர் பார்வையிட்டு, பணி குறித்து தெரிவிக்கும் பட்சத்தில், மதிப்பீட்டை தயார் செய்து, பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar