வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி காலை , 8:00 மணிக்கு அபிேஷ பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது. வால்பாறை அண்ணா நகர் முத்து மாரியம்மன் கோவில், வாழைத் தோட்டம் மாரியம்மன், ஐயப்ப சுவாமி, காமாட்சி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து கோவிலில் வழிபட்டனர். கோவில் வளாகத்தில், சிறுவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.