வாடிப்பட்டி : மதுரை பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். கோயில் திருவிழா அக்.,10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். நேற்று வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று (அக்.,19) கருப்பணசாமி கோயில் பொங்கல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரவை கிராம மக்கள் செய்து உள்ளனர்.