கொடைக்கானல்; கொடைக்கானலில் கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோயிலில் சென்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.தீபாவளி பண்டிகையின் அடுத்த நாள் வரும் அமாவாசையில் கேதார கவுரி விரதத்தை அனுசரிப்பவர்கள் அன்று விரதமிருந்து கோயிலுக்கு செசன்று வழிபடுவது வழக்கம். கவுரி விரதத்தை முன்னிட்டு அதிரசம் மற்றும் பழங்கள் கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.நேற்று ஆனந்தகிரி 1 வது தெருவில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கேதார கவுரி விரதத்தை கடைபிடித்து வழிப்பட்டனர். கவுரிவிரதம் கடைபிடிப்பதன் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.