Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ராமாயண ... மேல்மலையனுாரில் ஊஞ்சல் ஊற்சவம்: பக்தர்கள் குவிந்தனர் மேல்மலையனுாரில் ஊஞ்சல் ஊற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

20 அக்
2017
02:10

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று கேலாகலமாக துவங்கியது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலாவும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5 மணிக்கு சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6 மணிக்கு சூரசம்ஹாரமும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 26 ம் தேதி  காலை காவிரியில் தீர்த்தவாரியும் மாலை 7 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணமும், 27,28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழாவும், 30 ம் தேதி சுவாமி மீண்டும் மலை கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar