Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் ... வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம் வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

26 அக்
2017
12:10

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் சஷ்டி விழா கடந்த 20-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை 4:00மணிக்கு சண்முகநாத பெருமான் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வேலுடன் சண்முகநாத பெருமான் நான்கு ரத வீதியில் திருவீதி உலா வந்தார். 6:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி சன்னதி வாசல் முன்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து வேலுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. சூரசம்ஹாரம் முடிந்து சுவாமி மலைக்கு சென்ற பின் இரவு 8:00 மணிக்கு இளநீர், பால், பஞ்சாமிர்தம், திரவியம், விபூதி, பன்னீர், தயிர், அபிேஷகம் நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.இன்று காலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழா கடந்த அக்.,20ல் துவங்கியது. தினசரி மாலை பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற பக்தி பாடல் ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தன. தொடர்ந்து முருகனுக்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை முருகனுக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. மாலை 5:00 மணி அளவில் தேரடித்திடலில் மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளினார். அங்கு பல முகங்களில் தோன்றிய சூரனை முருகன் அம்பால் எய்து தலையை கொய்து வீழ்த்தினார். சுற்றிலுமுள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வாழ்த்தினர்.இன்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் சீர் வரிசை எடுத்து வருவார்கள். பின்னர் காலை 10:35 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டி தினமும் மாலை அபிேஷகம் நடந்தது. நேற்று சஷ்டியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு மதியம் சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.மாலை கோயில் வளாகத்தின் எதிரேயுள்ள மைதானத்தில் முருகன் சூரம் சம்ஹாரம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar