பதிவு செய்த நாள்
26
அக்
2017
12:10
கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த செப்., 15 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. நாள்தோறும் மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மண்டல பூஜையின் நிறைவு நாளை முன்னிட்டு, நேற்று காலை 9 :00 மணியளவில் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன் சங்கரி, பாலஆஞ்சநேயர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசநீரால் அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாஜகம், தேவதா ஆவாகனம், கணபதி ஹோமம், மகா லட்சுமி சுதர்ஸன ஹோமம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.