ராமநாதபுரம் : கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன்கோயிலில் சிறப்பு அலங்கார அபிஷேகம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிவிடு முருகன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. சிவன்கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டது. நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் மகா நாக தீபம் ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீபங்கள் ஏற்றப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.