தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், திருக்கார்த்திகை லட்சத்தீப விழா நடைபெறும்.கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி, கோயிலுக்கு முன் சொக்கப்பனை கொளுத்தப்படும். ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி, பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
* திண்டுக்கல் ரெங்கநாதபுரம் சீனிவாசப்பெருமாள் கோயிலிலும், இன்று மாலை 5 மணிக்கு லட்சத்தீபம் நடைபெற உள்ளது.