பதிவு செய்த நாள்
27
அக்
2017
01:10
கொடுமுடி: தலையநல்லூர், பொன்காளி அம்மன் கோவில் உண்டியலில், 5.54 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. சிவகிரி அருகே, தலையநல்லூரில், பொன்காளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். நேற்று உண்டியல்கள் திறந்து, காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. அன்னதான உண்டியலில், 56 ஆயிரத்து, 261 ரூபாய்; பொது உண்டியலில், 4.98 லட்சம் ரூபாய் என, 5.54 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் பணி நடந்தது. அம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.