பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
அவிநாசி : அவிநாசி சவுடேஸ்வரி அம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது; இதையொட்டி, கும்பாபிஷேக விழா நிகழ்வுகள், நேற்று துவங்கின. அவிநாசி, வ.உ.சி., நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து, கும்பாபி ஷேகம் நாளை நடைபெறுகிறது. விழாவையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கோமாதா, குதிரை ஊர்வலத்துடன் தீர்த்தக்குடங்களும், முளைப்பாளிகைகள், ஊர்வலமாக, நேற்று கொண்டு செல்லப்பட்டன. அதன்பின், விமான கலசம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று காலை, யாக சாலை பிரவேசம், விநாயகர் பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடத்தி, முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், நாடி சந்தானமும் நடக்கிறது.நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகளும், அதை தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு, தீர்த்தக்குடம் புறப்பாடு; 9:45 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது.