பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
கம்பம்: காமயகவுண்டன்பட்டி ஆப்பநாடு கொண்டயங்கோட்டை மறவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மங்கள மாகாளியம்மன் கோயில் கும்பாபிேஷக பூஜை நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை முதல் இரண்டாம் கால யாக பூஜைகள், தீபாராதனை, கடம் புறப்படுதல் நடந்தது. காலை 9: 30 மணிக்கு மேல் கும்பாபிேஷகத்திற்கான சிறப்பு அபிேஷக , ஆராதனை நடந்தது. 10:15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர்ஊற்றப்பட்டது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனை, மகா அபிேஷம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்கமிட்டித் தலைவர் எம்.பரமசிவம், துணைத்தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் டி.எம்.தவசிப்பாண்டியன், பொருளாளர் என்.பி.செல்வன், ஆப்பநாடுகொண்டயங்கோட்டை மறவர் சங்க தலைவர் எம்.சங்கிலிமுத்து, துணை தலைவர் எம்.செல்வக்குமார், செயலாளர் எஸ்.ஜெகநாதன், உதவி செயலாளர் வி.பி.வேல்முருகன், பொருளாளர் எம்.பி.மாடசாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், திருப்பணிக்கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.