ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜர் பெருமாள் கோவிலில், சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார் உற்சவ விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு விழா, நேற்று காலை, பூரண அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் தொடங்கியது. மாலை, உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.