நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் இன்று (31ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் 19வது திருபவித்றோத்சவ விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு பகவத் அனுக்கிரகம், அங்குரார்பணம் வாஸ்து சாந்தி, புண்யாகம் நிகழ்சியும், நேற்று காலை 8 மணிக்கு புண்யாகம், ஆகாரம், கலச ஸ்தாபனம், பவித்ரா ஸமர்ப்பணம் மாலை 6 மணிக்கு அக்னிப்பரணயனம், ஹோமம் பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்னம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.