கொடுமுடி: கொங்கு ஏழு திருத்தலங்களில், ஒன்றான கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத முக்கிய நிகழ்வான அன்னாபிஷேக பெருவிழா நாளை இரவு, 7:00 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை மதியம், 3:00 மணிக்கு ருத்ர ஜப யாகம், 3:30 மணிக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம், அதைதொடர்ந்து அன்னம் சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மேல் மஹா தீபாராதனை, 6:00 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. இரவு 7:15 மணிக்கு காவேரி ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்வும், 7:30 மணிக்கு அன்ன வினியோகம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதே போல, சிவகிரி வேலாயுத சுவாமி கோவில் மற்றும் கொந்தளம் திருநாகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.