பெருந்துறை: பெருந்துறையில், நேற்று கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பெருந்துறை, தோப்புப்பாளையம், தாமரை நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள, வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கூனம்பட்டி ஆதீனம், நடராஜ சுவாமிகள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். விழாவில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.