பதிவு செய்த நாள்
03
நவ
2017
01:11
விழுப்புரம்: விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில், கல்லறை திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லறை திருநாளை யொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள முன்னோர்கள், உறவினர்கள் நினைவு இடங்களில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில், நேற்று காலை 7:00 மணி முதல், கல்லறை திருநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, கிறிஸ்த வர்கள் அங்குள்ள நினைவிடங்களில், ஏராளமானோர் மலர் செண்டுகள் மற்றும் மலர் வளை யங்களை வைத்து, அஞ்சலி செலுத்தினர். பின், அங்கு மெழுகுவர்த்திகள் ஏந்தி சிறப்பு பிராத் தனை செய்தனர்.
திண்டிவனம்-மரக்கா ணம் ரோட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில், அலங்கரித்து, மலர்கள் தூவியும், மெழுவர்த்தி ஏற்றி வைத்தும், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் பகுதியில் கல்லறை திருவிழா அனுசரிக்கப்பட்டது. ரிஷி வந்தியம் அடுத்த சூ.ராயபுரம், மையனூர் ஆகிய கிராமங்களில் கல்லறை திருவிழா நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவர்கள் தங்களுடைய முன்னோர்களின் நினை விடத்திற்கு சென்று அவர்களை நினைத்து வணங்குவது வழக்கம். இதையொட்டி நேற்று முன்தினம் கல்லறைகளை சுத்தம் செய்தனர். நேற்று அதிகாலை 6 மணி முதலே பொது மக்கள் கல்லறைகளில் ஒன்று கூடி மலர் தூவி வணங்கினர்.
தொடர்ந்து தேவாலய பங்கு தந்தைகள் மூலம் மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.