பதிவு செய்த நாள்
03
நவ
2017
02:11
ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில், கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது.
உலகெங்கும் கிறிஸ்தவர்கள், நேற்று கல்லறைத் திருநாள் அனுசரித்தனர். இதையொட்டி தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தப்படுத்தி, மலர்கள், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.ஈரோடு, கருங்கல்பாளையம் எல்லை மாரியம்மன் கோவில் அருகே உள்ள, கிறிஸ்தவர்கள் கல்லறை, கோணவாய்க்கால் பகுதியில் உள்ள கல்லறை என, மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ கல்லறைகளில், கல்லறைத்திருவிழா அனுசரிக்கப்பட்டது. முன்னோர், உறவினர் கல்லறையை அலங்கரித்து, மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அந்தந்த பங்குக்கு உட்பட்ட பங்குத் தந்தை யர்கள், கல்லறையில் சிறப்பு திருப்பலி நடத்தி, புனித நீர் தெளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில், கல்லறைத் திருநாளை, கிறிஸ்தவர்கள் அனுசரித்தனர்.
* கோபி, மொடச்சூர் சாலை கல்லறை தோட்டத்தில், சிறப்பு ஆராதனை நடத்தினர். கல்லறைக ளுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.