பதிவு செய்த நாள்
03
நவ
2017
02:11
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கல்லறை திருநாளை அனுசரித்த கிறிஸ்தவர்கள், முன் னோரை நினைத்து வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல்லில் கல்லறை திருவிழாவையொட்டி மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி
தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. திருச்சி ரோட்டில் உள்ள ரோமன் கத்தோலி க்க கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டம், வேடப்பட்டி, மேட்டுப்பட்டி, தோமையார்புரம், அனும ந்தநகரில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
வத்தலக்குண்டு:புனித தோமையார் ஆலய பாதிரியார்கள் ரெக்ஸ்பீட்டர், ஆரோக்கியம் ஆகியோர் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை அழகுபடுத்தி மெழுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். சின்னுபட்டி,மரியாயிபட்டி, மேலக்கோயில்பட்டி, கரட்டுப்பட்டி கிராமங்களிலும் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது.
நிலக்கோட்டையில் ஆர்.சி., சி.எஸ்.ஐ., கல்லறைகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. மைக்கேல் பாளையம், அவையம்பட்டி, அம்மாபட்டி, சிலுக்குவார்பட்டி,கவிராயபுரம், சங்கராபுரம், பள்ள பட்டி கிராமங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
சின்னாளப்பட்டி:: ஏ.வெள்ளோடு, என்.பச்சம்பட்டி, ஆத்தூர், கன்னிவாடி, கரிசல்பட்டி, அனுமந் தராயல்கோட்டை, ஆவரம்பட்டி பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் முன்னோரை நினைத்து வழிபட்டனர்.