திருத்துறைப்பூண்டி: திருக்கொல்லிக்காட்டில் சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு நடந்து வரும் முன்னேற்றபாடு பணிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் முனியநாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.திருத்துறைப்பூண்டி யூனியனிலுள்ள 32 கிராம பஞ்சாயத்துக்களில் 31 கிராம பஞ்சாயத்தில் 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சீரமமைக்கும் பணி நடந்து வருகின்றது. இதில், 22 பணிகள் நிறைவடைந்துள்ளது. சீராளத்தூர், மணலி, கொக்கலாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இவற்றை கலெக்டர் முனியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருகொல்லிக்காடு மிதுருபாதநாயகி உடனுறைகின்ற அக்னீஸ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் பொங்கு சனீஸ்வரர் சனிப்பெயற்சி விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.அதையொட்டி நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின் போது, திருத்துறைப்பூண்டி யூனியன் உதவி செயற்பொறியாளர் லாரன்ஸ் அன்புநாதன், துரை ஆகியோர் உடனிருந்தனர்.