சிதம்பரம் : சந்திரகிரகணத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று (10ம் தேதி) பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.சந்திரகிரகணம் இன்று (10ம் தேதி) மாலை 6.45 மணி முதல் இரவு 9.45 வரை ஏற்படுகிறது. அதனையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 12 மணிக்கு உச்சி கால பூஜை முடித்து நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4.45 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு சாயரட்சை கால பூஜை, 8 மணிக்கு 2ம் கால பூஜை, 10.30 மணிக்கு அர்த்தசாம பூஜை நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை சாத்தப்படும். சந்திரகிரகணத்தையொட்டி இன்று மாலை 4.45 மணிக்கு நடை திறப்பதற்கு பதிலாக முன்கூட்டியே 3 மணிக்கு திறக்கப்படும்.பின்னர் சாயரட்சை பூஜையும் அதனை தொடர்ந்து 4.30 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.பின்னர் 6.15 மணி முதல் 9.45 மணி வரை சந்திரகிரகணம் முடிந்து அதன் பிறகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடத்தப்பட்டு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.இதுதொடர்பாக பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.