பதிவு செய்த நாள்
04
நவ
2017
11:11
சென்னை:சித்தர் திருமூலரின், குரு பூஜை விழா, தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள், பல்வேறு சபையினர் சார்பில், கோலாகலமாக நடத்தப்பட்டது.நாயன்மார்கள், 63 பேரில் ஒருவரும், 18 சித்தர்களின் முதல்வருமான, சித்தர் திருமூலர் குருபூஜை விழா, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், அசுபதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.திருமூலர் குரு பூஜையான வெள்ளிக் கிழமை, திருவாடுதுறை கோவில் திருமூலர் தனி சன்னதி; தென்பொன்பரப்பி, சொர்ணபு ரீசுவரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், சக்தி விநாயகர்கோவிலில், தெய்வீக மக்கள் கூட்டமைப்பு
சார்பில், நான்கு நாட்கள் திருமந்திர வேள்வி துவக்கப்பட்டது.
சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில், இரண்டு நாள் திருமந்திர மாநாடு துவங்கியது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் அருகில், திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை சார்பில், குரு பூஜை சிருங்கேரி சங்கர மடத்தில் நடந்தது.
இது போன்று, தமிழகம் முழவதும் உள்ள சிவாலயங்களில், திருமூலர் குரு பூஜை விழா
விமரிசையாக கொண்டாடப்பட்டது.