பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
திருப்பூர்:மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடந்தது ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்மையப்பரான சிவபெருமானுக்கு, ஐப்பசி பவுர்ணமியன்று, அன்னாபிஷேக விழா நடக் கிறது. அந்நாளில், ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையான அன்னத்தால், இறைவனுக்கு அபி ஷேகம் செய்யப்படுகிறது. தானத்தில் சிறந்த அன்னதானம் என்பதை விளக்கும் வகையில், அரிசி சாதம், காய்கறிகளை இறைவனுக்கு படைத்து, அதன் பின், பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமியான வெள்ளிக்கிழமை, திருப்பூர், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவி லில், சுவாமிக்கு, 150 கிலோ அரிசியால் தயாரித்த அன்னம் மற்றும் காய்கறிகளால் அபிஷே கம் செய்யப்பட்டது. தொரவலூர் அருகே அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், பிரமாண் டமாக எழுந் தருளியுள்ள சுவாமிக்கு, 75 கிலோ அரிசியால், அன்னம் தயாரித்தும், பல்வேறு வகையான நாட்டு காய்கறிகள் படைத்தும், அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங் கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்; பக்தர் களுக்கு அன்னதானம் நடந்தது.
அதேபோல், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது; 300 கிலோ அன்னம் தயாரிக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அன்ன தானம் நடந்தது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு, 108 கிலோ அன்னம், மற்றும் காய்கறிகளால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.
அவிநாசி, நாராசா வீதியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், முதலிபாளையம் மெய்நாதசுவாமி கோவில் <உள்ளிட்ட சிவா லயங்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
சித்தம்பலம் நவக்கிரககோட்டையில், வெள்ளிக்கிழமை நடந்த அன்னாபிஷேக விழாவில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை, 5.00 மணி முதல், சிறப்பு அபிஷேகங்கள், வேள் விகள் நடைபெற்றன. 6.00 மணிக்கு, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலை மையில், அன்னாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங் கேற்று, வழிபட்டனர். அனை வருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.