பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
திருத்தணி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் வெள்ளிக்கிழமை, அன்னாபிஷேகம் விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வெள்ளிக்கிழமை,, ஐப்பசி பவுர்ணமி திதியை ஒட்டி, அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு அன்னா பிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், காலை, 11:00 மணிக்கு, ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில், 1,000க்கும மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.அதே போல், திருத்தணி பகுதி யில் உள்ள, சதாசிவ லிங்கேஸ்வரர், வீரட்டீஸ்வரர், தாடூர் கடலீஸ்வரர், அகூர் அகத்தீஸ்வரர், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவில் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள, அனைத் து சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விசேஷமாக நடந்தது.