கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடந் தது. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, சிவாலாயங்களில் அன்னா பிஷேகம் நடப்பது வழக்கம். கரூரில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வெள்ளிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு அன்னாபிஷேக விழா துவங்கியது. பசுபதீஸ்வரர், நாகேங்ஸ்வரன், சூரிய மாலிஸ்வரர் சிலைகளுக்கு, அன்னாபிஷேகம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்ய ப்பட்டு, தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.