பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
ஈரோடு: ஈரோடு மாநகர், மாவட்டத்தில் உள்ள, சிவன் கோவில்களில், அன்னாபிஷேக விழா, வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது.
சிவபெருமானுக்கு, ஒவ்வொரு நட்சத்திரத்தில், ஒவ்வொரு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஐப்பசியில் வரும், அஸ்வதி நட்சத்திரத்தில், பவுர்ணமி நாளன்று, அரிசி சாதம் கொண்டு அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடக்கிறது. உலக உயிரினங்கள் பசி, பிணியின்றி நலமாக வாழ வேண்டும் என்ற, உயரிய நோக்கத்தின் அடிப் படையில், உணவை படைத்த இறைவனுக்கே, உணவால் அன்னாபிஷேகம் செய்து, அனை த்து ஜீவராசிகளுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக, இந்த விழா நடக்கிறது. இதன்படி நேற்று ஈரோட்டில் கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர், பவானி சங்க மேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும், அன்னாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. ஈரோடு மகிமாலீஸ்வரருக்கு, 150 கிலோ, ஆருத்ர கபாலீஸ்வரருக்கு, 1,050 கிலோ அரிசியில் வடித்த அன்னத்தை கொண்டு, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவில், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
* கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. முன்னதாக ருத்ர ஜப யாகம், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையை தொடர் ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். காவிரியாற்றில் அன்ன சிரசு விடப் பட்டு, பக்தர்களுக்கு அன்னம் வினியோகிக்கப்பட்டது.
* இதேபோல் சிவகிரி அருகே தலையநல்லூர் திருநாகேஸ்வரர் கோவில், கொந்தளம் திரு நாகேஸ்வரர் கோவில், ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவில், சென் னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை, சோழீஸ்வரர் கோவில், புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், மாராயிபாளையம் மூ.ஈ.ச, மலைக்கோவில், கோபி அய்யப்பன் கோயிலில் உள்ள, காசி விசாலாட்சி பரமேஸ்வரர் கோவில், பாரியூர் அமரபனீஸ்வரர், பச்ச மலை மரகதீஸ்வரர், மொடச்சூர் சோமேஸ்வரர், காசிபாளையம் காசி விஸ்வநாதர், கோபி ஈஸ்வரன் கோவில்களில், அன்னாபிஷேக விழா வழக்கமான கோலாகலத்துடன் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் சிவன் கோவில்கள் களைகட்டின.