கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் திருவாசக முற்றோதல் குழுவினர் சார்பாக நடந்த 107வது முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சந்நியாசி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். காலை 8 மணிமுதல் பிற்பகல் வரை திருவாச முற்றோதல் நடை பெற்றது. நிகழ்ச்சியில், புலவர்கள் ஆறுமுகம், கணேசன், கல்யாணசுந்தரம் உட்பட ஓதுவார்கள் பலர் கலந்துகொண்டு திருவாசகப் பதிகங்களைப் பாடினர்.தொடர்ந்து இறைவழிபாடும், பிரசாதங்களும் வழங்கப்பட்டது.