பதிவு செய்த நாள்
06
நவ
2017
12:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2018ம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. முதல் நாளன்று, 640 பேர் முன்பதிவு செய்தனர். நாமக்கல் நகரின் மைய பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் ஆஞ்சநேயருக்கு, அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் அபி?ஷகம் செய்யப்படும். பின்னர், மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான தினசரி அபி ?ஷகத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் ஏராளமான பக்தர்கள், போட்டி போட்டு முன்பதிவு செய்தனர்.
இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறியதாவது: முதல்நாள் அன்றே அடுத்த ஆண்டுக்கான விசேஷ நாட்கள், சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டது. இதுவரை, 640 பேர் தினசரி அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இதர நாட்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.