பதிவு செய்த நாள்
07
நவ
2017
10:11
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு, வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. சென்னிமலையில் கடந்த, 22 ஆண்டுகளாக, ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு செயல்படுகிறது. இவர்கள் சார்பில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு, ரத ஊர்வலம் நடக்கிறது. இதற்காக, 14 லட்சம் ரூபாய் செலவில், 22.5 கிலோ வெள்ளியை பயன்படுத்தி, வெள்ளி மயில் வாகனம் மற்றும் குடை செய்து கொடுத்துள்ளனர். கிருத்திகை நட்சத்திர நாளில், மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த புறப்பாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.