ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2017 11:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் துவங்கி ஏழு நாட்கள் நடக்கிறது.இதையொட்டி இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் சன்னதி தெற்கு பிரகா ரத்தில் உள்ள ஊஞ்சலில், ஆண்டாள்,ரெங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். அப்போது சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, திருவாய்மொழி சேவாகாலம் நடக்கிறது. கடைசிநாள் பூரநட்சத்திரத்தை முன்னிட்டு அவதரித்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளும் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்கின்றனர்.