தென்காசி கோயில் அம்மன் சன்னதி வாயிலை திறக்க வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2011 11:12
தென்காசி : "தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி நுழைவு வாயில் கேட் மூடப்பட்டிருப்பதை திறக்க வேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் பா.ஜ.,கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று மாலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரிடம் தென்காசி நகராட்சி பா.ஜ.,கவுன்சிலர்கள் கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:""தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் தென்காசி காசிவிசுவநாதர் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் உலகம்மன் சன்னதி நுழைவு வாயில் கேட்டை கோயில் நிர்வாகம் மூடியே வைத்திருக்கிறது.இந்து தர்ம ஆகம விதிகளின்படி அம்மன் சன்னதி நுழைவு வாயில் மூடப்படக்கூடாது. முன்பு இவ்வாயில் வழியேதான் உற்சவர் காட்சி நடப்பது வழக்கம். தற்போது கதவு மூடப்பட்டிருப்பதால் பக்தர்கள் மனம் வேதனையடைந்துள்ளது. கடந்த ஆட்சியில் இந்த வாயில் கதவு மூடப்பட்டது. அம்மன் சன்னதி நுழைவு வாயில் கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.