திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: கோயில் அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2017 11:11
திருப்பரங்குனறம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச., 2ல் மலைமேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி திரி, 5 கிலோ கற்பூரம் பயன் படுத்தப்படும். தீபத்திற்கு நெய் வழங்க விரும்புபவர்கள் கோயில் அலுவலகத்தில் வழங்கலாம். விபரங்களுக்கு 0452 - 248 2248 ல் தொடர்பு கொள்ளலாம் என கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷிணி தெரிவித்தார். கார்த்திகை தீபத்திருவிழா நவ.,24ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.