பதிவு செய்த நாள்
11
நவ
2017
11:11
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில் மற்றும் ஸ்ரீ கோடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், ஸ்ரீ குருவாயூரப்பன் மற்றும் ஸ்ரீ கோடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, 6ம் தேதி துவங்கியது. இதையொட்டி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலிருந்து, முளைப்பாலிகை ஊர்வலம், தையம், கேரளா செண்டை மேளம் முழங்க நடந்தது. தொடர்ந்து, 7ம் தேதி, ஹரித்துவாரமங்கலம் ராஜம் பட்டாச்சார்யார் தலைமையில் யாக சாலை பூஜை, நவக்கிரஹ, மகா சுதர்சன, லட் மி நரசிம்மர், தன்வந்திரி, மகாலட் மி ஹோம பூஜைகளுடன் துவங்கியது. விஸ்வரூபம், திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, நேற்று முன்தினம் காலை, 10:00க்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் நடராஜன், ஈஸ்வரி, சண்முகம், கலாராணி மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்தனர்.