பதிவு செய்த நாள்
11
நவ
2017
11:11
பல்லடம் : பல்லடம் அருகே, காமநாயக்கன்பாளையத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு ஜென்மாஷ்டமி விழா, சிறப்பாக நடத்தப்பட்டது. காலை, 6.30மணிக்கு, விநாயகர், அம்மன், மற்றும் அர்த்த நாரீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலபைரவ மூர்த்திக்கு சர்வஅபிஷேகம், மகா வேள்விகள் நடைபெற்றன. காலை, 9.30 மணிக்கு, உற்சவ மூர்த்திக்கு சர்வஅபிஷேகங்கள் நடந்தது. பால், இளநீர், தயிர், நெய், சந்தனம், மஞ்சள், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், காமநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.