தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ஐயப்ப பக்தர்கள், கரூர் வழியாக நடந்தே சபரி மலைக்கு சென்றனர்.
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடாக, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். நேற்று மதியம் வேடசந்தூரில் ஒரு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் வந்து தங்கியது.
அவர்களிடம் விசாரித்தபோது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து, குருசாமி ரமேஷ் தலைமையில் 80 பேர் சபரிமலை செல்வதாக கூறினர்.
இதற்காக இந்த பக்தர்கள் அக். 15 ந்தேதி புறப்பட்டுள்ளனர். ஆயிரத்து 200 கி.மீ., தூரத்தை நடந்தே வந்த பக்தர்கள் 38 நாட்களாக நடந்து, நவ.21 ல் ஐயப்பன் கோவிலை அடைய உள்ளதாக தெரிவித்தனர்.