பதிவு செய்த நாள்
15
நவ
2017
11:11
திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், 58ம் ஆண்டு மண்டல பூஜைகள், வரும், 17ல் துவங்குகிறது.தர்மசாஸ்தா டிரஸ்ட், ஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், மண்டல கால உற்சவ பூஜைகளும், கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 17ம் தேதி, கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜை துவங்குகிறது. டிச. 6ம் தேதி மாலை, கொடியேற்ற விழா நடக்கிறது. 7ல், மஹா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.
டிச., 8, 9ம் தேதி சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, பள்ளி வேட்டை நடக்கிறது. டிச. 11ம் தேதி பகல், 12:00 மணிக்கு, திருப்பூர் பெருமாள் கோவில் குளத்தில், ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, பனிரெண்டார் திருமண மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்று மாலை, 6:00 மணிக்கு, ஐயப்ப சுவாமியின் திருவீதியுலா, ஈஸ்வரன் கோவிலில் இருந் து, பஞ்ச வாத்தியங்கள், வாண வேடிக்கை, ஒயிலாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக, கோவிலை வந்தடைகிறது. அன்றிரவு, 9:30 மணியளவில், கொடி இறக்குதல் நடைபெறு கிறது.
மண்டல பூஜையில், முக்கிய நிகழ்வாக டிச., 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, 17ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, நிறைவடைகிறது. டிச., 16ம் தேதி, இரவு 7:00 மணி க்கு, கூட்டுவழிபாடு பஜனையும், 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, குத்துவிளக்கு பூஜையும், 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, அகண்டநாம பஜனையும் நடைபெற உள்ளது.
மண்டல பூஜையை முன்னிட்டு, வரும் 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிறு அன்று, ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 11:00 மணி முதல், அன்னதானம் வழங்க ப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல், ஜன., 14ம் தேதி வரை, தினமும் மாலை, 6:30 முதல், இரவு 9:00 மணி வரை, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பஜனை, சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.