பதிவு செய்த நாள்
15
நவ
2017
11:11
கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க சிறப்பு கண்ணாடி : ஹாசன் மாவட்ட நிர்வாகம் துரித பணிகள்
ஹாசன்: ஸ்ரவணபெலகோலா கோமதீஸ்வரர் மஹாமஸ்தாபிஷேகத்தை, பக்தர்கள் கண்டுகளிக்க, அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஹாசன் மாவட்டம், ஸ்ரவணபெலகோலாவிலுள்ள கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பிப்ரவரியில், மஹா மஸ்தாபிஷே கம் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், துரிதமாக நடந்து வருகின்றன. சாலைகள் சீரமைக்கப்படுகின்றன; அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன.
கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை, பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக, சிலையின் முன்பகுதியில், பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. உலகின் வெவ்வே று நாடுகளிலிருந்தும், மஹா மஸ்தாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கானோர் ஸ்ரவண பெலகோலாவுக்கு, வருகை தருவர். ஆனால், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் வரையிலானோர் மட்டுமே, விந்திய கிரி மலையில் ஏறி, பார்வையாளர்கள் மாடத்தில், மஸ்தாபிஷேகத்தை காண முடிகிறது.
இம்முறை விந்தியகிரி மலையில், 58 அடி உயரம் கொண்ட, கோமதீஸ்வரர் சிலைக்கு செய் யப்படும் அபிஷேகம், அதி நவீனமான, விர்சுவல் ரியாலிடி கண்ணாடி மூலமாக, நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது.
இதற்காக, 20 லட்சம் கண்ணாடிகள் வாங்கவும் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, தனியார் நிறுவனங்களுடன், மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி உள்ளது. பல நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்பு திட்டத்தில் பங்கேற்க, ஆர்வம் காண்பித்துள்ளன.
இந்த தொழில்நுட்பத்தில், நேரடி ஒளி பரப்புவதற்கு வசதியாக இணைய தள சேவை வழங்கும் படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், ஹாசன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இணைய தள தொடர்பு, எவ்வித இடையூறும் இல்லாமல் கிடைத்தால், காட்சிகள், விர்சுவல் ரியாலிடி கண்ணாடி அணிந்தவர்களை, நொடி பொழுதில் சென்றடையும்.
இத்தகைய கண்ணாடி அணிந்தவர்களுக்கு, கோமதீஸ்வரர் சிலையின் தலை முதல், கால் வரை நடக்கும் அபிஷேகத்தை, நேரில் நின்று பார்த்த அனுபவம் கிடைக்கும்.