விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களில், 7.92 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 உண்டியல்களும், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் நேற்று காலை திறந்து எண்ணப்பட்டன. ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் குருநாதன் உட்பட கோவில் ஊழியர்கள், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியலில் காணிக்கையாக 7 லட்சத்து 92 ஆயிரத்து 298 ரூபாய், 12 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இதேபோல், கடந்த செப்டம்பர் 7ம் தேதி உண்டியல் திறந்து எண்ணியபோது, 10 லட்சத்து 92 ஆயிரத்து 363 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.