காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் நடைபெறும், கடை ஞாயிறு விழா நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்ற சிவன் கோவில்களில் கச்சபேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில், ‘கடை ஞாயிறு விழா’ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் நடைபெறும் இவ்விழாவில், பக்தர்கள் தலை சம்மந்தப்பட்ட நோய்கள் தீர்வதற்கு நேர்த்தி கடன் செலுத்துவர். இதற்காக, புதிய மண்சட்டியில் மாவிளக்கில் தீபம் ஏற்றி, தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வந்தனர். விழா முடியும், ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையன்று, சுவாமி புறப்பாடு நடைபெறும்.