பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
ஊட்டி : ஊட்டி ஐயப்பன் கோவிலில், ஐயப்ப பஜனை சபா சார்பில், 63வது ஆண்டு திருவிழா, 16ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வரும் ஜனவரி, 14ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில், நாள்தோறும் காலை விசேஷ அபிஷேகங்கள், பூஜைகள், சிறப்பு நிறமாலை பூஜை, அன்னதானம், அனைத்து மகளிர் சங்கத்தினரின் திருவிளக்கு பூஜை, ஹரிஹரன் பஜனை சபா சார்பில் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
முக்கிய திருவிழா நாளான , டிச.,16ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்க ப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மார்க்கெட் மாரியம்மன் கோவிலை அடைகிறது. பின்பு, பகல், 2:00 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து, சிறுமிகள் விளக்கேற்றிய தாளங்க ளுடன் ஐயப்பன் கோவிலை வந்தடைகின்றனர்.
இரட்டை பிள்ளøயார் ஐயப்ப பஜனை சபா, நீலமலை ஐயப்ப இளைஞர் சேவா சமாஜத்தின் சார்பில், சிறப்பு நிறமாலை பூஜைகள் நடக்கின்றன. மகர ஜோதியை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை, ஐயப்ப பஜனை சபா நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மேற்கொண்டு ள்ளனர்.